மும்பை குண்டு வெடிப்பு விசாரணைக்கு அமெரிக்க உதவி
மும்பை குண்டு வெடிப்பு விசாரணைக்கு அமெரிக்க உதவி
மும்பை குண்டு வெடிப்பு விசாரணைக்கு அமெரிக்க உதவி
ADDED : ஜூலை 17, 2011 01:19 AM
வாஷிங்டன் : 'மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில், இந்தியாவுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்' என, அமெரிக்கா கூறியுள்ளது.
கடந்த 13ம் தேதி, மும்பை நகரில் மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், 18 பேர் பலியாகினர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், ஜே கார்னே கூறுகையில், ''மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து, இந்தியா மேற்கொண்டுள்ள விசாரணைக்கு, தேவைப்படும் உதவிகளை வழங்க, அமெரிக்கா தயாராக உள்ளது. எனினும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில் லை,'' என்றார். அதேபோல், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது: மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக, இந்திய அரசு விசாரணை மேற்கொண்டுள்ளது. அந்த விசாரணை எவ்வகையில் செல்கிறது என, பொறுத்திருந்து, பா ர்க்க வேண்டும். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்புண்டா என, தெரியவில்லை.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அடுத்த வாரம் இந்தியா செல்கிறார். அப்போது, இந்திய - அமெரிக்க உறவு குறித்து, இரண்டாம் கட்ட பேச்சுவார் த்தை மேற்கொள்ளப்படும். பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக் கை குறித்தும், வலியுறுத்தப்படும். மும்பை தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து, இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடக்கும்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கையை வலியுறுத்துவோம். தற்போதைய சம்பவங்களை பார்க்கும்போது, அதை தீவிரமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.இவ்வாறு டோனர் கூறினார்.