
விருதுநகர்: விருதுநகர் - அழகாபுரி ரோட்டில் தொழிற்பேட்டை உள்ளது.
இங்கு ஏராளமான ஆலைகள் உள்ளன. இந்நிலையில் தொழிற்பேட்டையின் முக்கிய ரோடு பகுதியில் சருகுகள் திடீரென தீப்பற்றியது. இத்தீ மளமளவென பரவி அருகில் உள்ள டிரான்பார்மர் பகுதிக்கு பரவியது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த ஆலைகளுக்குள் தீ பரவவில்லை. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.