மெக்சிகோ சிறையிலிருந்து59 கைதிகள் தப்பி ஓட்டம்
மெக்சிகோ சிறையிலிருந்து59 கைதிகள் தப்பி ஓட்டம்
மெக்சிகோ சிறையிலிருந்து59 கைதிகள் தப்பி ஓட்டம்
ADDED : ஜூலை 17, 2011 01:15 AM
நியூவோ லாரெடோ:அமெரிக்காவை ஒட்டிய மெக்சிகோ நாட்டின் சிறையில் இருந்து, தப்ப முயற்சித்த கைதிகளில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
59 பேர் தப்பிச் சென்றனர். மெக்சிகோவின் வடக்கில், நியூவோ லாரெடோவில் உள்ள சிறையில், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட கைதிகள் உட்பட மொத்தம் 1,200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அடிக்கடி கைதிகள் தப்பிச் செல்லும் இச்சிறையில் இருந்து, நேற்று முன்தினம், தப்ப முயற்சித்த கைதிகளில் ஏழு பேர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருந்தாலும், 59 பேர் தப்பிச் சென்றனர்.அமெரிக்காவின் எல்லையையொட்டி இப்பகுதி அமைந்து இருப்பதால், மெக்சிகோ நாட்டில் இருந்து போதைப் பொருட்கள் அமெரிக்காவிற்குள் கடத்திச் செல்லப்படுகிறது. அப்படி கடத்திச் செல்லும் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும். சிறையில் இருந்து அடிக்கடி கைதிகள் தப்பிச் செல்வது வழக்கமாக உள்ளது. இதுவரை, இச்சிறையில் இருந்து 400 கைதிகள் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.