/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விஷவாயு தாக்கி ஒருவர் பலி மற்றொருவருக்கு சிகிச்சைவிஷவாயு தாக்கி ஒருவர் பலி மற்றொருவருக்கு சிகிச்சை
விஷவாயு தாக்கி ஒருவர் பலி மற்றொருவருக்கு சிகிச்சை
விஷவாயு தாக்கி ஒருவர் பலி மற்றொருவருக்கு சிகிச்சை
விஷவாயு தாக்கி ஒருவர் பலி மற்றொருவருக்கு சிகிச்சை
ADDED : பிப் 10, 2024 12:55 AM
கோவை:கோவை சுங்கம், சிவராம் நகரை சேர்ந்தவர் மோகன சுந்தரலிங்கம், 37. இவர், சொந்தமாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரி வைத்துள்ளார்.
சவுரிபாளையத்தில், ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதற்காக, லாரியில், மோகன சுந்தரலிங்கம், ஊழியர்கள் ராமு, குணா ஆகியோரை அழைத்து சென்றார். நேற்று முன் தினம், லாரியில் கழிவுகளை அப்புறப்படுத்தியபோது, எதிர்பாராதவிதமாக குணா தவறி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த மோகன சுந்தரலிங்கம், குணாவை காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கிய போது, விஷவாயு தாக்கி இருவரும் மயங்கி விழுந்தனர். ராமு உட்பட அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மோகன சுந்தரலிங்கத்தை பரிசோதித்த டாக்டர், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். குணாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.