Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பிரசாரம்

பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பிரசாரம்

பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பிரசாரம்

பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பிரசாரம்

ADDED : பிப் 10, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, நேற்று மல்லேஸ்வரத்தில் உள்ள வித்யாமந்திர் கல்வி அறக்கட்டளை பள்ளியில், ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ரங்கநாத்துக்கு ஆதரவாக, ஆசிரியைகளிடம் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பிரசாரம் செய்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:


எடியூரப்பா, பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, கல்வி துறைக்கு பல பங்களிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.

புனிதமான கல்வி துறைக்கு தகுதியான நபரை தேர்வு செய்வது அனைவரின் கடமை.

பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர் ரங்கநாத் களமிறங்குகிறார். இவர் தீவிரமான அரசியல்வாதி; பிரபல வழக்கறிஞர். சமூகத்துக்கு அதிகளவில் சேவை செய்து வருகிறார்.

தற்போது இடைத்தேர்தலுக்கு யார் பொறுப்பு. எத்தனை முறை கட்சி மாறினார் அல்லது எம்.எல்.சி.,யாக இருந்து என்ன செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் பங்களிப்பு 'பூஜ்யம்'.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ரங்கநாத்துக்கு ஆதரவாக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பிரசாரம் செய்தார். இடம்: மல்லேஸ்வரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us