கொளத்தூர் சந்தைக்கு பருத்தி வரத்து
கொளத்தூர் சந்தைக்கு பருத்தி வரத்து
கொளத்தூர் சந்தைக்கு பருத்தி வரத்து
ADDED : பிப் 10, 2024 07:48 AM
கொளத்துார் : கொளத்துார் வேளாண் விற்பனை கூடத்துக்கு நேற்று, 13.5 டன் பருத்தி விற்பனைக்கு வந்தது.
கொளத்துார், மைசூரு நெடுஞ்சாலையோரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு வாரம் தோறும் வெள்ளியன்று பருத்தி விற்பனைக்கு வரும். நேற்று, 13.5 டன் எடையுள்ள, 339 மூட்டை பருத்தி விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ, 58 முதல், 60 ரூபாய் என மொத்தம், 8.06 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
கடந்த வாரத்தை விட, நேற்று ஒரு டன் பருத்தி குறைவாக விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.