ADDED : பிப் 10, 2024 05:36 AM

தாண்டிக்குடி: பெரும்பள்ளம் வனச்சரகத்தில் நேற்று காலை காட்டுத் தீ பரவி ஏராளமான வன நிலங்கள் தீக்கிரையாகின.
மலைப்பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் ஒரு வாரமாக அதிகரித்ததால் பசுமையாக காட்சியளித்த வனப்பகுதிகளில் புல் உள்ளிட்ட இதர தாவரங்கள் கருகி வருகின்றன. நேற்று காலை ஜெரோனியம் வருவாய் நிலத்தில் பற்றிய காட்டுத் தீ வனப்பகுதியில் பரவியது. ஏராளமான வனநிலங்கள், அரிய மரங்கள், வனவிலங்குகள் பாதித்தன.
பெரும்பள்ளம் ரேஞ்சர் குமரேசன் தலைமையில் வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வெயிலின் தாக்கம், சூறைக்காற்றால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
மாலை வரை பற்றிய தீயை வனத்துறையினர் அணைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.