/உள்ளூர் செய்திகள்/மதுரை/தொழில் முனைவோரானால் தன்னிறைவு அடையலாம் மேயர் அறிவுரைதொழில் முனைவோரானால் தன்னிறைவு அடையலாம் மேயர் அறிவுரை
தொழில் முனைவோரானால் தன்னிறைவு அடையலாம் மேயர் அறிவுரை
தொழில் முனைவோரானால் தன்னிறைவு அடையலாம் மேயர் அறிவுரை
தொழில் முனைவோரானால் தன்னிறைவு அடையலாம் மேயர் அறிவுரை
ADDED : பிப் 10, 2024 05:24 AM
மதுரை: ''பெண்கள் தொழில் முனைவோராக மாறினால் தன்னிறைவு அடையலாம்'' என தொழில் முனைவோர் சான்றிதழ் வழங்கும் விழாவில் மேயர் இந்திராணி பொன் வசந்த் தெரிவித்தார்.
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர், பெட்கிராட் சுயதொழில் பயிற்சி நிறுவனம் சார்பில் கைத்தொழில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பெட்கிராட் பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் சுப்புராமன், தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் கவிதா துவக்கி வைத்தார்.
சான்றிதழ் வழங்கிய மேயர் இந்திராணி பொன் வசந்த் பேசுகையில், ''தொழில் முனைவோர் சான்றிதழ் வாங்கியவுடன் வேலை முடிந்து விடாது. உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்து தொழில் முனைேவாராக மாறும் போது தான் தன்னிறைவு அடைய முடியும் . தைரியம், தன்னம்பிக்கை, தொழில் ரகசியம், விற்பனை செய்யும் திறமை போன்ற யுக்திகளை கையாள வேண்டும்'' என்றார்.
பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு குறித்து இன்ஸ்பெக்டர் வசந்தி பேசினார்.
நகர் நல அலுவலர் வினோத் குமார், சமுதாய அலுவலர் பஞ்சவர்ணம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உதவி மேலாளர் சக்திவேல், தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளர் குணசேகரன். நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மைய மாநிலச் செயலாளர் ராஜசேகரன் கலந்து கொண்டனர் . பயிற்சியாளர் கண்ணன் நன்றி கூறினார்.