சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்கு சந்தை நிலவரம்/பங்கு சந்தை நிலவரம்
ADDED : பிப் 10, 2024 12:43 AM
முந்தைய முடிவு: 71,428.43நேற்றைய முடிவு: 71,595.49மாற்றம்: 167.06 ஏற்றம்
முந்தைய முடிவு : 21,717.95நேற்றைய முடிவு: 21,782.50மாற்றம்: 64.55 ஏற்றம்
நேற்று ஏற்ற இறக்கத்துடன் தள்ளாடியது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாத அளவுக்குப் பணவீக்கம் உயர்ந்தே இருப்பதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், உலக நாடுகளைச் சேர்ந்த இதர மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தைக் குறைக்க தயங்குகின்றன. இவையெல்லாம், நிறுவனங்களின் லாபத்தின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை வர்த்தகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அதனால் பங்குகளை வாங்கிக் குவிப்பதில் அவர்கள் ஆழ்ந்த ஈடுபாடு காட்ட மாட்டேன் என்கின்றனர். ஒருமாதிரி மேலோட்டமாகவே சந்தையில் செயல்படுகின்றனர் அதோடு, அடுத்த வாரம் வெளியாக இருக்கும் அமெரிக்க, பிரிட்டன், இந்திய பணவீக்க விகிதம் பற்றிய கவலையும் சேர்ந்துகொண்டது. இதனால் அமெரிக்க 10 ஆண்டுகால கடன் பத்திரங்களின் வருவாய் சற்றே உயர்ந்திருந்தது ஆசிய நாட்டுச் சந்தைகளுக்கு விடுமுறை என்பதால், அந்த நாடுகளில் இருந்து நம் சந்தைக்குப் பெரிய சமிக்ஞை ஏதும் கிடைக்கவில்லை. இது நடுவே, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், பிப்ரவரி 8ம் தேதி, 4,933 கோடி ரூபாய்க்கு நம் பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர் ஆனால், ஒருசில செய்திகள் மந்தத்தனத்தைப் போக்குவதாக இருந்தன. குறிப்பாக, ஆர்.பி.ஐ. வெளியிட்ட வாடிக்கையாளர் நம்பிக்கை சர்வே ஒரு விஷயத்தைச் சொன்னது. அதாவது, அடுத்த ஓராண்டுக்கு பொதுவான பொருளாதார நிலையும் வேலைவாய்ப்புகளும் உயரும் என்ற நம்பிக்கையை நம் நாட்டுக் குடும்பங்கள் வெளிப்படுத்தியுள்ளன உணவு விலைகள் சற்றே குறைந்துள்ளதால், ஜனவரி மாதத்துக்கான சில்லரை பணவீக்கம் 5.09 சதவீதம் அளவுக்குக் குறையும் என்ற நம்பிக்கையை ஒரு தனியார் அறிக்கை தெரிவித்தது ஆர்.பி.ஐ., '2023 -- 24, மூன்றாம் காலாண்டுக்கான தொழிற்சாலை எதிர்பார்ப்பு சர்வே' என்ற புதிய சர்வேவை வெளியிட்டது. அதில், இந்தக் குறிப்பிட்ட காலாண்டில், உற்பத்தியைப் பற்றிய மதிப்பீடு, கொள்திறம் பயன்பாடு, முடிக்க வேண்டிய ஆர்டர்கள், வேலைவாய்ப்பு, பொதுவான வணிக சூழல் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும்போது, தொழிற்சாலைகளில் ஆரோக்கிய வளர்ச்சி இருப்பதை இந்த சர்வே சொன்னது பொதுத் துறை வங்கிகளும், மருந்துத் துறை பங்குகளும் தான் சந்தைநேர இறுதியில் லாபத்தில் இருந்தன. வாகனங்கள், மூலதனப் பொருட்கள், எண்ணெய், எரிவாயு, உலோகம், மின்சாரம், மனைவணிக பங்குகள் நஷ்டத்தில் முடிவடைந்தன.
கிராசிம் எஸ்.பி.ஐ., அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் சன் பார்மா ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி
எம் அண்டு எம், ஓ.என்.ஜி.சி., பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி., ஹிண்டால்கோ