/உள்ளூர் செய்திகள்/சேலம்/புதிய ரேஷன் கார்டு பெற மக்கள் குறை தீர் முகாம்புதிய ரேஷன் கார்டு பெற மக்கள் குறை தீர் முகாம்
புதிய ரேஷன் கார்டு பெற மக்கள் குறை தீர் முகாம்
புதிய ரேஷன் கார்டு பெற மக்கள் குறை தீர் முகாம்
புதிய ரேஷன் கார்டு பெற மக்கள் குறை தீர் முகாம்
ADDED : பிப் 10, 2024 07:49 AM
சேலம் : சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டத்தில், பொது வினியோக திட்ட மக்கள் குறை தீர் முகாம் தாலுகா அலுவலகங்களில் இன்று நடைபெற உள்ளது. முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் மொபைல் எண் பதிவு மற்றும் மொபைல் எண் மாற்றம் செய்தலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கள் தங்கள் குறைகளை, வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.