மொபைல் பறிப்பு இருவருக்கு 'காப்பு'
மொபைல் பறிப்பு இருவருக்கு 'காப்பு'
மொபைல் பறிப்பு இருவருக்கு 'காப்பு'
ADDED : பிப் 09, 2024 11:15 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் பஜார் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 43. அதே பகுதியில் மொபைல்போன் விற்பனை கடையில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை, சுங்குவார்சத்திரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கி நடந்து சென்றார்.
திருமங்கலம் அருகே வந்தபோது, 'கே.டி.எம்.,' இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஸ்ரீதரிடம் இருந்து மொபைல் போனை பறித்துவிட்டு தப்பினர்.
ரோந்து பணியில் இருந்து இதைப் பார்த்த சுங்குவார்சத்திரம் போலீசார், அவர்களை பிடிக்க பின்தொடர்ந்தனர். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பாலாஜி, 22, எழும்பூரைச் சேர்ந்த ரோஷன், 22, ஆகிய இருவருக்கு கை முறிந்தது.
போலீசார் அவர்களை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, சிகிச்சைக்குப் பின் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.