/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சிறந்த 'சமாதான்' சேவை! ரூ.8.60 கோடி வணிக வரி வசூல்சிறந்த 'சமாதான்' சேவை! ரூ.8.60 கோடி வணிக வரி வசூல்
சிறந்த 'சமாதான்' சேவை! ரூ.8.60 கோடி வணிக வரி வசூல்
சிறந்த 'சமாதான்' சேவை! ரூ.8.60 கோடி வணிக வரி வசூல்
சிறந்த 'சமாதான்' சேவை! ரூ.8.60 கோடி வணிக வரி வசூல்
ADDED : பிப் 10, 2024 12:20 AM
திருப்பூர்;திருப்பூர் வணிக வரி கோட்டத்தில், 'சமாதான்' திட்டம் மூலம், இதுவரை, 8.60 கோடி ரூபாய் நிலுவை வரி வசூலாகியுள்ளது; மொத்த நிலுவை வசூல் 11 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி.,க்கு முந்தைய வணிக வரி நிலுவை தொகையை வசூலிப்பதற்காக, தமிழக அரசு, வணிக வரித்துறையில் 'சமாதான்' திட்டத்தை அறிவித்தது. கடந்த 2023 அக்டோபர் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த 'சமாதான்' திட்ட கால அவகாசம், வரும் 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.
50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வரி நிலுவை தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் 10 லட்சம் ரூபாய் வரையிலான நிலுவை வைத்துள்ள வர்த்தகர்கள், 20 சதவீத தொகை; 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு கோடி வரை நிலுவைக்கு, 66 சதவீதம் தொகை செலுத்தினால் போதும்.
தமிழகம் முழுவதும் உள்ள வர்த்தகர்கள், 'சமாதான்' திட்டத்தை பயன்படுத்தி, வரி நிலுவையை செலுத்தி, வழக்குகளிலிருந்து விடுபட்டுவருகின்றனர்.
திருப்பூர் வணிக வரி கோட்டத்தில், சமாதான் திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் நிலுவையுள்ள 5,312 வர்த்தகர்களின் வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 446 வர்த்தகர்களிடமிருந்து, 8.60 கோடி ரூபாய் நிலுவை வரி வசூலிக்கப்பட்டுள்ளது.