ADDED : பிப் 10, 2024 05:32 AM
வடமதுரை; புத்துார் கரிவாடன்செட்டிபட்டியில் நல்லேறு பெட் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், வடமதுரை பாரத ஸ்டேட் வங்கி கிளை இணைந்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
நிறுவன தலைவர் கணேசன் தலைமை வகித்தார். தலைமை செயல் அதிகாரி கார்த்திகேயன் வரவேற்றார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராகுல் குமார், செயலாளர் தண்டபாணி, வங்கி துணை மேலாளர் மணிகண்டன், திருச்சி மண்டல நிர்வாக இயக்குனர் கண்ணன் பேசினர். பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.