புவனகிரியில் குளங்களை மீட்க கோரிக்கை
புவனகிரியில் குளங்களை மீட்க கோரிக்கை
புவனகிரியில் குளங்களை மீட்க கோரிக்கை
ADDED : பிப் 09, 2024 11:21 PM
புவனகிரி : புவனகிரி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை மீட்க, மாவட்ட நிர்வாகத்திற்கு, ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் குணசேகரன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
புவனகிரியில் பெரியது, சிறியது என 15க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தற்போது 6 பெரிய குளங்கள், 3 சிறிய குளங்கள் மட்டுமே உள்ளன.
அவைகளும் அசுத்தம் செய்யப்பட்டும், கழிவுநீர் தேங்கும் இடமாகவும் மாறியுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
புவனகிரி பகுதியில் குளங்களை மீட்க பலமுறை ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில், அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் புவனகிரி முழுவதும் குறைந்து விட்டது. வெள்ளாற்றின் வழியாக உப்புநீர் கலப்பதாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, புவனகிரி பகுதியில் ஆய்வு செய்து, குளங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.