ADDED : பிப் 10, 2024 12:25 AM
கோவை;மாநகராட்சி பெண் பணியாளர் ஒருவர், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மேற்பார்வையாளர் ஒருவர் மீது மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின்படி, புகார்கள் உட்குழு விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் பணியாளர், உரிய ஆவணங்களுடன் நேற்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.