போலி பில் போட்டு யூரியா கடத்தல்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பகிரங்க குற்றச்சாட்டு
போலி பில் போட்டு யூரியா கடத்தல்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பகிரங்க குற்றச்சாட்டு
போலி பில் போட்டு யூரியா கடத்தல்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பகிரங்க குற்றச்சாட்டு
ADDED : மே 31, 2025 06:46 AM

கோவை: விவசாயிகள் குறை கேட்பு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ஷர்மிளா முன்னிலை வகித்தார்.
கீழ்சித்திரைச்சாவடியை சேர்ந்த ஞானசுந்தரம் பேசுகையில், 'நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும். விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. நீர் நிலைகளில் நேரடியாக கழிவு நீர் கலக்கிறது. அதை தடுத்து நீர் வளத்தை பாதுகாக்க வேண்டும்.'என்றார்.
வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் செந்தில்குமார் பேசுகையில், 'மழை பெய்தால் எம்.ஜி.ஆர்., காய்கறி மொத்த மார்க்கெட்டும் சேறும் சக தியுமாகி விடுகிறது. கழிவு நீரில் காய்கறிகளை ஊற வைத்து விற்பது சரியாக இருக்காது. கவுண்டம்பாளையம் பழைய குப்பை கிடங்கு வளாகத்தில் மார்க்கெட் அமைக்க வேண்டும். இம்மார்க்கெட்டை வேளாண் துறை எடுத்து நடத்த வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி பேசுகையில், 'கூட்டுறவு வங்கிகளில் நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்களுக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
விவசாயி காளிச்சாமி கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் செம்மறியாடு, வெள்ளாடு கணக்கெடுக்கப்படுகிறது. வெள்ளாடுகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. வெள்ளாடு வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த என்றார்.
வேளாண் முன்னாள் துணை இயக்குனர் பழனிசாமி பேசுகையில், 'விவசாயிகள் பெயரில் போலியாக பில் போட்டு, யூரியா கடத்தப்படுகிறது. யூரியா கடத்தினால் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை அமைத்து யூரியா கடத்தலை தடுக்க வேண்டும். யூரியா கொண்டு செல்வோரிடம் உள்ள பில்களை சரிபார்த்து, அதிலுள்ள வேண்டும்.பெயர்களில் உள்ளவர்கள் விவசாயிகளா என கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.
விவசாயி பெரியசாமி பேசுகையில், 'மழை பெய்து நொய்யல் ஆறு வாய்க்காலில் தண்ணீரில் வரும்போது, ரசாயன கழிவுகளை வெளியேற்றுகின்றனர். ஊராட்சிகளில் இருந்து கழிவு நீர் நேரடியாக குளத்தில் கலக்கப்படுகிறது. இது தொடர்ந்தால், விவசாயமும் மாசுபடும். அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி பேசுகையில், 'டியூகாஸ் நிறுவனத்தில், போலி நகையை வைத்து, நான்கு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.
கலெக்டர் பதிலளிக்கையில், 'டியூகாஸ் நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது; சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும்.
எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் உயரத்தை அதிகப்படுத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றனர். தண்ணீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். குளங்களில் கழிவு நீர் தேங்காத அளவுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். என்றார்.
வாழை விவசாயி கண்ணீர்!
அன்னுார் விவசாயி ரங்கசாமி, கண்ணீர் மல்க பேசுகையில், “அன்னுார் வட்டாரத்தில் வாழை பயிரிட்டிருக்கிறோம். கடந்த,16ம் தேதி அடித்த சூறாவளி காற்றுக்கு அனைத்து வாழைகளும் சரிந்து போய் விட்டது. எங்களது வாழ்க்கை ஐந்தாண்டுக்கு பின்னோக்கிச் சென்று விட்டது. எனது மகளின் கல்லூரி படிப்புக்கு கட்டணம் செலுத்தலாம் என நினைத்திருந்தேன். உழைப்பு அத்தனையும் வீணாகி விட்டது. வாழை பயிரிட ஒரு மரத்துக்கு, 150 ரூபாய் வரை செலவழித்திருக்கிறோம். இழப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும்.' என்றார்.
கோழி வழங்கியதில் முறைகேடு
அன்னூர் விவசாயி தங்கமுத்து பேசுகையில், 'கால்நடைத்துறை சார்பில், ரூ.3,200 கொடுத்தால், 10 நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டத்தில் கோழி வாங்கினேன். அவை நாட்டுக்கோழிகளே இல்லை. நாட்டுக்கோழிகளாக இருந்தால், நாய்களை பார்த்தால் ஓடிவிடும். கால்நடைத் துறை வழங்கிய கோழிகள், நாய்களோடு ஒன்றாக கிடக்கின்றன. இதுசம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.