கொலையான சிறுமி உடல் மீட்பு காதலன் தற்கொலை முயற்சி
கொலையான சிறுமி உடல் மீட்பு காதலன் தற்கொலை முயற்சி
கொலையான சிறுமி உடல் மீட்பு காதலன் தற்கொலை முயற்சி
ADDED : பிப் 10, 2024 06:16 AM
அனுகொண்டனஹள்ளி: மாயமான தலித் சிறுமி, சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியைக் கொன்ற காதலன், கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றார்.
கோலார் மாலுார் தொம்மலுார் கிராமத்தில் வசித்தவர் 14 வயது சிறுமி. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். சிறுமியும், நிதின், 23, என்பவரும் காதலித்தனர்.
கடந்த 7ம் தேதி மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி, ஆடு மேய்க்கச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மகள் மாயமானதாக, மாலுார் போலீசில் புகார் செய்தனர்.
நேற்று காலை பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் அனுகொண்டனஹள்ளி கிராமத்தில், சிறுமியின் சடலம் கிடப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டனர். அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
சிறுமியின் பெற்றோர், அனுகொண்டனஹள்ளி போலீசில் அளித்த புகாரில், 'எங்கள் மகளும், நிதினும் காதலித்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, எங்கள் மகளை, நிதின் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். அவர் மீது போலீசில் புகார் அளிக்க சென்றோம். ஆனால் ஊர் பெரியவர்கள், பஞ்சாயத்து பேசினர்; நிதினை கண்டித்தனர். ஊர் முன் அவமானப்பட்டதால், எங்களை மகளை கடத்திச் சென்று, நிதின் கொன்று விட்டார்' என்று கூறி இருந்தார்.
இதையடுத்து நிதினை கைது செய்ய, போலீசார் சென்றனர். ஆனால் அவர் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்றார். தற்போது கோலாரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். விசாரணையில் சிறுமியை கொன்றது தெரிந்தது. சிகிச்சை முடிந்ததும் அவரை போலீசார் கைது செய்ய உள்ளனர்.