ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்ட ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு
ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்ட ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு
ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்ட ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு
UPDATED : ஜூலை 24, 2024 04:09 AM
ADDED : ஜூலை 24, 2024 01:30 AM

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0ன் கீழ், ஏழைகள், நடுத்தர பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 1 கோடி வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசின் 2.2 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியும் அடங்கும். குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும், வட்டி மானியம் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில், கூடுதலாக மூன்று கோடி வீடுகள் கட்டப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளன.
தொழில்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்குவதற்கு தங்கும் இடங்களுடன் கூடிய வாடகை வீடுகள், பொது - தனியார் கூட்டு முயற்சியில் ஏற்படுத்தித் தரப்படும்.
மேம்பட்ட தன்மையுடன் திறமையான மற்றும் வெளிப்படையான வாடகை வீட்டுச் சந்தைகளுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்படும்.