Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/' நில அளவைக்கு இணைய வழியில் விண்ண ப் பிக்கலாம்'

' நில அளவைக்கு இணைய வழியில் விண்ண ப் பிக்கலாம்'

' நில அளவைக்கு இணைய வழியில் விண்ண ப் பிக்கலாம்'

' நில அளவைக்கு இணைய வழியில் விண்ண ப் பிக்கலாம்'

ADDED : பிப் 09, 2024 11:13 PM


Google News
விழுப்புரம்: தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறையில் நில உரிமையாளர்கள் நிலஅளவை செய்ய வட்ட அலுவலகங்களுக்குச் செல்லாமல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட துறையில் நில உரிமையாளர்கள் நிலஅளவை செய்வது தொடர்பாக சம்மந்தபட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவை மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், நிலஅளவை கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

நிலஅளவை செய்யும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது மொபைல் மூலம் தெரிவிக்கப்படும். நில அளவை செய்த பின், மனுதாரர் மற்றும் நிலஅளவலர் கையெழுத்திட்ட அறிக்கை, வரைபடத்தை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவை மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்படும்.

பொதுமக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து தங்களின் நிலத்தை அளவீடு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us