/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தை அமாவாசை தினத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்தை அமாவாசை தினத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்
தை அமாவாசை தினத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்
தை அமாவாசை தினத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்
தை அமாவாசை தினத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்
ADDED : பிப் 10, 2024 12:37 AM

திருப்பூர்;உத்தராயண தை அமாவாசையான நேற்று, ஸ்ரீஅகத்தியர் எண்ணான்கு அறங்கள் தர்மபரிபாலன அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடந்தது.
காலை, 6:30 மணிக்கு, செட்டிபாளையம் முருகா மருத்துவமனை வளாகத்தில் உள்ள அகத்தியர் சன்னதியில், பித்ரு சூட்சும மந்திர மகாயாகம் மற்றும் அகஸ்திய மூலமந்திர மகா யாகமும், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவ மகா யாகமும் நடந்தது. அனைத்து தெய்வங்களுக்கும் அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.
காலை, 10:30 மணி முதல், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது; நேற்று, 3,500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக, அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.