/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வரும் 13ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்வரும் 13ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்
வரும் 13ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்
வரும் 13ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்
வரும் 13ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்
ADDED : பிப் 09, 2024 11:17 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் வரும் 13ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்தாண்டு தனியார் துறை 100 வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 4 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டு நடந்து வருகிறது.
அதன்படி வரும் 13ம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், விழுப்புரம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லுாரியுடன் இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடத்துகிறது.
முகாம் காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை, திண்டிவனம் அடுத்த பேரணியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த 150ற்கும் மேற்பட்ட முன்னணி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள், தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் பங்கேற்று பயன்பெறலாம்.
முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.
முகாம் தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 13ம் தேதி நடைபெறும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.