/உள்ளூர் செய்திகள்/சென்னை/கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்
கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்
கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்
கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்
ADDED : பிப் 10, 2024 12:21 AM

சென்னை,கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
இது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பில் சிறப்பாகப் பணிபுரிந்த, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் வனிதா, சென்னை மாவட்ட ஆர்.டி.ஓ., ரெங்கராஜன், அரியலுார் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன் ஆகியோருக்கு, அமைச்சர் கேடயம் வழங்கி பாராட்டினார்.