இந்தியா, பாக்., சீனாவிடம் எத்தனை அணு ஆயுதங்கள்?
இந்தியா, பாக்., சீனாவிடம் எத்தனை அணு ஆயுதங்கள்?
இந்தியா, பாக்., சீனாவிடம் எத்தனை அணு ஆயுதங்கள்?
ADDED : ஜூன் 18, 2024 01:42 PM

புதுடில்லி: ‛‛ பாகிஸ்தானை விட இந்தியாவிடம் 2 அணு ஆயுதங்கள் கூடுதலாக உள்ளது '' என ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அணு ஆயுதங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய 9 அணு ஆயுத நாடுகள், தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு ஜன., நிலவரப்படி இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 170 அணுஆயுதங்கள் மட்டுமே உள்ளது. 2023 ல் இந்தியா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. இதே ஆண்டில், இந்தியாவும், பாகிஸ்தானும், அணு ஆயுதங்களை ஏவி விடும் அமைப்பில் புது வழிகளை அறிமுகம் செய்தது. சீனாவின் அனைத்து பகுதிகளையும் தாக்கும் வகையில், இந்தியா தனது அணு ஆயுதங்களை மேம்படுத்தியது.
சீனாவும் தனது அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது. 2023 ல் அந்நாடு 410 ல் இருந்து 500 ஆக அணு ஆயுதங்களை அதிகரித்து உள்ளது. சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை தயாரிப்பதிலும், அணு ஆயுதங்கள் நிரப்பிய கப்பல்களை நிலை நிறுத்துவதிலும் அந்நாடு கவனம் செலுத்தி வருகிறது. மற்ற நாடுகளை காட்டிலும், அணு ஆயதங்களை சீனா தயாரித்து வருகிறது. இருப்பினும், அமெரிக்கா, ரஷ்யா நாடுகளை சீனா முந்த முடியவில்லை.
உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் மட்டும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.