எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இணைய தயக்கம்
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இணைய தயக்கம்
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இணைய தயக்கம்
ADDED : பிப் 10, 2024 11:36 PM
பெங்களூரு : லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் காங்கிரஸ் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகி இருப்பதால், அக்கட்சியில் இணைய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தயக்கம் காட்டி வருகின்றனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அக்கட்சிக்கு 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, துணை முதல்வரும், கர்நாடகா காங்கிரஸ் தலைவருமான சிவகுமார், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு வலை விரித்தார். அந்த வலையில் சிக்கிய சில எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசில் இணைய விரும்பினர். அதற்கு தக்க நேரத்தை எதிர்பார்த்து, காத்து இருந்தனர்.
ஐந்து வாக்குறுதிகளால் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் நம்பினர்.
ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக்கணிப்பில், கர்நாடகாவில் பா.ஜ., கூட்டணி 24 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதனால் கட்சி மாறலாம் என்ற நினைப்பில் இருந்த, எம்.எல்.ஏ.,க்களை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இப்போது இருக்கும் கட்சியிலேயே நீடிக்கலாம் என்ற முடிவுக்கு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வந்து உள்ளனர்.
இதனால் அவர்கள் காங்கிரசில் இணைய தயக்கம் காட்டி வருகின்றனர். இது சிவகுமாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.