தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி
தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி
தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி
UPDATED : பிப் 10, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 09:41 AM
திருப்போரூர்:
திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி, நேற்று முதல் நாளை வரை, மூன்று நாட்கள் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.இப்போட்டியில், தேசிய அளவில், 24 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லுாரிகள் சார்ந்த 72 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். போட்டியில், நீதிமன்றத்தில் வாதாடுவது போன்று, மாணவர்கள் வாதத்தை எடுத்து வைப்பர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.இதற்கான துவக்க விழா, நேற்று மாலை நடந்தது. அதில், சென்னை மாவட்ட நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்ட சேவை மைய உறுப்பினர் செயலருமான நசீர் அகமது, வழக்கறிஞர் கணேஷ் சந்துரு, கல்லுாரி முதல்வர் ஜெயகவுரி உட்பட பலர் பங்கேற்றனர்.நீதிபதி நசீர் அகமது பேசியதாவது:
மாதிரி நீதிமன்ற போட்டியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்தெந்த உரிமைகள் நமக்கு உள்ளதோ, அதே உரிமைகள் அடுத்தவர்களுக்கும் உள்ளது. சட்ட விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த மாதிரி நீதிமன்ற போட்டியில் பங்கேற்போருக்கும், வெற்றி பெறுவோருக்கும் வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.