இந்தியன் ஆயில் - அதானி காஸ் ரூ.2,500 கோடி முதலீடு திட்டம்
இந்தியன் ஆயில் - அதானி காஸ் ரூ.2,500 கோடி முதலீடு திட்டம்
இந்தியன் ஆயில் - அதானி காஸ் ரூ.2,500 கோடி முதலீடு திட்டம்
ADDED : பிப் 10, 2024 12:37 AM

புதுடில்லி:இந்தியன் ஆயில் நிறுவனமும், அதானி காஸ் நிறுவனமும் இணைந்து எரிவாயு விற்பனையை இரட்டிப்பாக்க, 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூட்டு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கூட்டு நிறுவனத்தின் இயக்குனர் எஸ்.கே.ஜா மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியன் ஆயில் மற்றும் அதானி டோட்டல் காஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், தன், 300 சில்லரை விற்பனை நிலையங்கள் வாயிலாக தினமும் 1 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் எரிவாயுவை விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் சிறு தொழில்கள் மற்றும் குடும்பங்களுக்கான எரிவாயு விற்பனையை இரட்டிப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் அதிகரித்து வரும் எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இந்த காலகட்டத்தில், 600க்கும் அதிகமான சில்லரை விற்பனை நிலையங்களின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.