பிரியாணி கடைகளால் கழிவுநீர் அடைப்பு
பிரியாணி கடைகளால் கழிவுநீர் அடைப்பு
பிரியாணி கடைகளால் கழிவுநீர் அடைப்பு
ADDED : பிப் 10, 2024 12:20 AM

புளியந்தோப்பு, திரு.வி.க., நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு ஆடுதொட்டி சாலை, பட்டாளம் டிகாஸ்டர் சாலைகளில், இயந்திரம் மூலம் நேற்று முன்தினம் இரவு கழிவுநீர் அடைப்பு அகற்றப்பட்டது.
இப்பகுதியில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் பிரச்னை என்பது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில், தற்போதைய கழிவுநீர் அடைப்புக்கு, இப்பகுதியில் உள்ள பிரியாணி விற்பனை கடைகள் என, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரியாணி மற்றும் கோழிக் கழிவுகளை, சாக்கடையில் விடுவதால் அடைப்பு ஏற்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே, விதிமீறலில் ஈடுபடும் கடை உரிமையாளர்களை கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.