தட்சிண கன்னடாவில் சபாநாயகர் காதர் போட்டி?
தட்சிண கன்னடாவில் சபாநாயகர் காதர் போட்டி?
தட்சிண கன்னடாவில் சபாநாயகர் காதர் போட்டி?
ADDED : பிப் 10, 2024 06:02 AM

தட்சிண கன்னடா: லோக்சபா தேர்தலில், தட்சிண கன்னடாவில் சபாநாயகர் காதரை களமிறக்க காங்கிரஸ் விரும்புகிறது.
தட்சிண கன்னடா லோக்சபா தொகுதி, கடந்த எட்டு தேர்தலிலும் பா.ஜ.,வின் இரும்புக் கோட்டையாக உள்ளது. இதைத் தகர்க்க, தகுதி வாய்ந்த வேட்பாளரை களமிறக்க காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது.
இதற்காக, செல்வாக்குமிக்க தலைவர்களை ஆராய்ந்தபோது, தற்போதைய சபாநாயகர் காதரைத் தான் பலரும் கைகாட்டுகின்றனர். இதனால், அவரை லோக்சபா தேர்தலில் களமிறக்குவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக யோசிக்கின்றனர்.
ஹிந்துக்கள், சிறுபான்மையினர் அதிகமாக இருப்பதால், காதருக்கு கனிசமான ஓட்டு வங்கி இருக்கிறது. இரு சமுதாயங்களின் ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பதால், நல்ல பெயரும் உள்ளது.
சமீபத்தில் நடந்த ஹிந்துக்களின் பூதகோலா ஆன்மிக வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது பரபரப்பாக பேசப்பட்டது. அவர் சார்ந்த சமுதாயத்தினர் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், யாரோ ஒரு சிலர் பேசுவதால் அதை பொருட்படுத்த வேண்டாம் என்று தட்டிக் கழித்தார்.
எம்.எல்.ஏ., அமைச்சர், சபாநாயகர் என பல பொறுப்புகளை வகித்தும், வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக செய்துள்ளதாக அப்பகுதியினர் பேசிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.