ADDED : பிப் 09, 2024 09:18 PM
அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில் முதல்முறையாக நடக்கும் கம்பத்து ஆட்டம் அரங்கேற்றத்தை காண, பொதுமக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில், கொங்கு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் கம்பத்து ஆட்டம் பிரசித்தி பெற்றது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கம்பத்தில் ஏறியும், கம்பத்தை சுற்றியும் நளினமாக, ஆண்கள், பெண்கள் ஆடும் கம்பத்து ஆட்டம் பார்ப்போரை வியக்க வைக்கும்.
அன்னுார் வட்டாரத்தில் முதல் முறையாக, கரியாம்பாளையம் பகுதியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோருக்கு, மூன்று மாதங்களாக தீரன் கலைக்குழு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்களின் அரங்கேற்றம், இன்று மாலை 5:30 மணிக்கு கரியாம்பாளையம் கோவில் முன் நடக்கிறது.
இதை காண, பொதுமக்களுக்கு கலைக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.