Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!

விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!

விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!

விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!

Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூரில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், அரசூர் பகுதியில் மலட்டாற்றில் மூன்று பேர் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் மூழ்கி 3 பேரும் உயிரிழந்தனர். இவர்கள் மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அரசூரைச் சேர்ந்த அபிநயா,15, சிவசங்கிரி,20, தட்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்,15, ஆகிய 3 பேர் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் அபிநயா, சிவசங்கிரி ஆகிய இருவர் சகோதரிகள் ஆவர்.

ஆற்றில் குளிக்க சென்றபோது 3 பேர் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us