ADDED : பிப் 10, 2024 07:55 AM
அரூர் : அரூர் அடுத்த கூத்தாடிப்பட்டி, தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சங்கிலிவாடி, செல்லம்பட்டி சோரியம்பட்டி ஆகிய கிராமங்களில் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
தனியார் அறக்கட்டளை மற்றும் நிறுவனங்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அரசு மருத்துவர் அழகரசன் பேசுகையில், அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான நோய்களுக்கும், அனைத்து விதமான மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. பாதுகாப்பான மருத்துவம் அளிக்கப்படுவதுடன், கர்ப்பிணிகள், குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இலவசமாக மருத்துவ சேவை பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.
தொடர்ந்து, உடல்நிலை பாதிக்கப்படும்போது, மந்திரித்தல், சீட்டு கட்டுதல் போன்ற மூடப்பழக்கத்திற்கு அடிமையாகாமல், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வது குறித்து ஒயிலாட்டம், நாடகம் மூலம் கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.