Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/102 போலீசார் அதிரடி டிரான்ஸ்பர்; திருப்பூர் எஸ்.பி., நடவடிக்கை

102 போலீசார் அதிரடி டிரான்ஸ்பர்; திருப்பூர் எஸ்.பி., நடவடிக்கை

102 போலீசார் அதிரடி டிரான்ஸ்பர்; திருப்பூர் எஸ்.பி., நடவடிக்கை

102 போலீசார் அதிரடி டிரான்ஸ்பர்; திருப்பூர் எஸ்.பி., நடவடிக்கை

ADDED : பிப் 09, 2024 11:28 PM


Google News
உடுமலை;திருப்பூர் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த போலீசார் உட்பட, 102 போலீசார் முதல்கட்டமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உடுமலை, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், என, ஐந்து சப்-டிவிஷன்கள் உள்ளடக்கியது.

சமீபத்தில், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற அபிஷேக் குப்தா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கியுள்ளார்.

சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட ஸ்டேஷன் பகுதியில் மது, லாட்டரி என, எவ்விதமான சட்டவிரோத செயல்களும் நடக்கக்கூடாது. மீறி நடந்தால் கடும் நடவடிக்கை வேண்டும் என, அடுக்கடுக்கான உத்தரவு, அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

பட்டியல் தயாரிப்பு


மாவட்டத்தில் உள்ள ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் போலீசாரின் விபரம், மூன்றாண்டுக்கு மேல் உள்ளவர்கள், புகார்களில் சிக்கியவர்கள், விருப்ப மாறுதல் கேட்பவர்கள் என பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் முதல் அனைத்து போலீசாரும் இடமாற்றத்தில் உள்ளனர்.

102 பேர் இடமாற்றம்


இந்நிலையில், குற்றப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, மதுவிலக்கு என, எஸ்.எஸ்.ஐ., முதல் போலீசார் வரை என, முதல்கட்டமாக, 102 போலீசாரை எஸ்.பி., அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்டேஷன்களுக்கு விரைந்து செல்ல அறிவுறுத்தப்பட்டது. இன்னும் சில நாட்களில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் உள்ளிட்ட மீதமுள்ள போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

மேலும், கடந்த சில வாரம் முன்பு இடமாற்றம் செய்யப்பட்ட சில எஸ்.ஐ.,க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்டேஷன்களுக்கு இன்னும் செல்லாமல், பழைய இடங்களிலேயே தொடர்ந்து வருகின்றனர்.

தற்போது இடமாற்றம் செய்யப்படும் போலீசாரும் மீண்டும், 'டூயிங் டியூட்டி' என்ற பெயரில், பழைய ஸ்டேஷன்களுக்கு திரும்ப வாய்ப்புள்ளதால், நிர்வாக நலன் கருதி இதை எஸ்.பி., அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us