/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கலையாத கழுகுப்பார்வை! ரூ.4.51 கோடி அமலாக்கப்பிரிவு அபராதம்கலையாத கழுகுப்பார்வை! ரூ.4.51 கோடி அமலாக்கப்பிரிவு அபராதம்
கலையாத கழுகுப்பார்வை! ரூ.4.51 கோடி அமலாக்கப்பிரிவு அபராதம்
கலையாத கழுகுப்பார்வை! ரூ.4.51 கோடி அமலாக்கப்பிரிவு அபராதம்
கலையாத கழுகுப்பார்வை! ரூ.4.51 கோடி அமலாக்கப்பிரிவு அபராதம்
ADDED : பிப் 10, 2024 12:21 AM
திருப்பூர்;திருப்பூர் வணிக வரி கோட்டத்தில், 'இ-வே' பில் இல்லாமல் சரக்கு கொண்டுசென்ற வாகனங்களை பிடித்து, அமலாக்க பிரிவினர் 4.51 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.
ஈரோடு வணிக வரி கோட்டத்தில் திருப்பூர் வணிக வரி மாவட்டம் இயங்கிவந்தது. அமலாக்க பிரிவினர், ஈரோட்டிலிருந்து திருப்பூர் வந்து, வாகன சோதனைகள் நடத்தவேண்டியிருந்தது. எப்போதாவதுதான் வணிக வரித்துறையின் பறக்கும்படை வாகனம், திருப்பூருக்கு 'விசிட்' அடிக்கும்.
மூன்று வணிக வரி மாவட்டங்களை உள்ளடக்கி, புதிய திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டு, கடந்த 2023, ஜூலை மாதம் முதல் செயல்பட்டுவருகிறது. அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில், வணிக வரி கோட்டத்துக்கான அமலாக்க பிரிவுடன் கூடிய இணை கமிஷனர் அலுவலகம் இயங்குகிறது.
இதையடுத்து, பறக்கும்படையினர், திருப்பூரின் பிரதான சாலைகளில், தினமும் இரவு - பகலாக ரோந்து சென்று, வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.
வாகனங்களில் கொண்டுசெல்லப்படும் பின்னலாடைகள் உட்பட அனைத்துவகை சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களையும் மடக்கிப்பிடித்து, இ-வே பில், இ- இன்வாய்ஸ் உள்ளதா; சரக்குகளின் தொகை விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா; வரி ஏய்ப்புக்கான முகாந்திரம் உள்ளதா என, ஆய்வு செய்கின்றனர்.
அதிரடி வசூல்
வணிக வரித்துறை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பூர் வணிக வரி கோட்ட பகுதிகளில், பகலில் 2; இரவு நேரம் ஒன்று என்ற அடிப்படையில் பறக்கும்படை வாகனங்கள், ரோந்து செல்கின்றன. ஒவ்வொரு வாகனத்திலும் தலா இரண்டு வணிக வரி அதிகாரிகள் இருக்கின்றனர்; அவர்களிடம், இ-வே பில் தணிக்கை செய்வதற்கான செயலி உள்ளது. விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.
திருப்பூர் வணிக வரி மாவட்டம் செயல்பாட்டுக்கு வந்த, கடந்த 2023, ஜூலை 7 முதல் நடப்பாண்டு ஜனவரி 31ம் தேதி வரை, இ-வே பில் இல்லாமல் இன்றி சரக்கு கொண்டுசென்ற, 868 வாகனங்கள் அமலாக்க பிரிவின் பிடியில் சிக்கியுள்ளன; மொத்தம் 4.51 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.