PUBLISHED ON : பிப் 10, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
விண்வெளியில் சாதனை
சர்வதேச விண்வெளி மையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்த வீரர் ரஷ்யாவின் ஓலக் கோனென்கோ. 2008ல் இருந்து இதுவரை 5 முறை விண்வெளிக்கு சென்றுள்ளார். தற்போது விண்வெளி மையத்தில் இருக்கும் இவர் பிப். 5ல் விண்வெளியில் அதிக நாட்கள் (879) தங்கியவர் என்ற சாதனை படைத்தார். சக வீரர் கென்னடி படல்கா 787 நாட்கள் தங்கியதே சாதனை. இதுகுறித்து அவர் கூறுகையில், 'விண்வெளியில் பணியாற்றுவது எனக்கு பிடித்த விஷயம். மற்றபடி சாதனைக்கு அல்ல. சிறுவயதில் இருக்கும் போது, எதிர்காலத்தில் விண்வெளி வீரர் ஆவேன் என நினைத்ததில்லை' என்றார்.
தகவல் சுரங்கம்
உலக பயறு வகை தினம்
பயறு வகைகளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் 2019 முதல் பிப். 10ல் உலக பயறு வகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பலரும் தினசரி உணவில் ஏதாவது ஒரு பயறு, பருப்பு வகையை சேர்ப்பது நலம். காய்கறியை விட இவற்றில் சத்து அதிகம். புரதச்சத்து அதிகமுள்ளவைகளில் பயறு வகை முக்கிய இடம் வகிக்கின்றன. ஒருவர் தினமும் 85 கிராம் பருப்பை உணவில் சேர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. 'பருப்பு வகைகள்; ஊட்டமளிக்கும் மண், மக்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.