ADDED : பிப் 10, 2024 05:27 AM
பழநி: பழநியாண்டவர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி மீனாட்சி 61.
2020ல் கோவை காந்திபுரத்தில் அரசு பஸ்சில் ஏற்பட்ட விபத்தால் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குடும்பத்தினர் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2023ல் இழப்பீடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் போக்கு வரத்துக் கழகம் தாமதம் செய்தது. மேல்முறையீடு செய்ததில் ரூ.6 லட்சத்து 71 ஆயிரம் 774 இழப்பீடு வழங்க நீதிபதி ஜெயசுதாகர் உத்தரவிட்டார். செலுத்தத் தவறியதால் நேற்று கோவை வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் பழநி பஸ்ஸ்டாண்டில் ஜப்தி செய்யப்பட்டது.