PUBLISHED ON : பிப் 10, 2024

சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் கேரள மாநிலம், கொச்சியில் உள்ளது. இதை முழுவதும், சூரிய சக்தியில் இயங்க வைத்துள்ளது கேரள அரசு.
இதற்கான பணிகள், 2013ல் துவங்கப்பட்டன. கோல்கத்தாவை சேர்ந்த நிறுவனம், இதற்கான பணிகளை மேற்கொண்டது. விமான நிலையம் அருகே, 45 ஏக்கர் பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டது. இங்கு, 46 ஆயிரத்து, 150 சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் வழியாக, நாள் ஒன்றுக்கு, 12 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. முற்றிலும், சூரிய ஒளி சக்தி மூலம் இயங்குகிறது கொச்சி விமான நிலையம். உலகிலேயே முற்றிலும் சூரிய சக்தி மூலம் இயங்கும் ஒரே விமான நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
- நர்மதா விஜயன்