/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வி.கே.டி., சாலைப் பணிகள் மந்தம்; அரசியல் கட்சியினர் சாலை மறியல்வி.கே.டி., சாலைப் பணிகள் மந்தம்; அரசியல் கட்சியினர் சாலை மறியல்
வி.கே.டி., சாலைப் பணிகள் மந்தம்; அரசியல் கட்சியினர் சாலை மறியல்
வி.கே.டி., சாலைப் பணிகள் மந்தம்; அரசியல் கட்சியினர் சாலை மறியல்
வி.கே.டி., சாலைப் பணிகள் மந்தம்; அரசியல் கட்சியினர் சாலை மறியல்
ADDED : பிப் 09, 2024 11:28 PM

நெய்வேலி : நெய்வேலி ஆர்ச்கேட்டில் வி.கே.டி.,சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்திட கோரி வி.கே.டி., சாலை போராட்டக்குழுவின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி வருகிறது.
6ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வரும் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி நேற்று நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் தலைமை தாங்கினார்.
தகவல் அறிந்த நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் விஷ்ணுபிரியா, அழகிரி, உள்ளிட்ட போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டக்குழுவினர் கலைந்துச்சென்றனர்.
விரைவில் பணியை முடிக்காவிட்டால் வரும் லோக்சபா தேர்லை புறக்கணிப்போம் எனத் தெரிவித்தனர்.
நேற்று காலை 10.15 க்கு துவங்கிய சாலை மறியல் போராட்டம் சரியாக 11. 30க்கு முடிவடைந்தது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பண்ருட்டி பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து நான்குமுனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
கண்டரக்கோட்டையில் நடந்த மறியலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ராயன் தலைமையில், காடாம்புலியூரில் எழுமலை தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது.