/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மின் பொறியாளர் அலுவலக கட்டடம் அமைக்க கோரிக்கைமின் பொறியாளர் அலுவலக கட்டடம் அமைக்க கோரிக்கை
மின் பொறியாளர் அலுவலக கட்டடம் அமைக்க கோரிக்கை
மின் பொறியாளர் அலுவலக கட்டடம் அமைக்க கோரிக்கை
மின் பொறியாளர் அலுவலக கட்டடம் அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 09, 2024 10:09 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, எலப்பாக்கம் ஊராட்சி உள்ளது. எலப்பாக்கத்தில் இருந்து ஆனைகுன்னம் செல்லும் சாலையில், உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது.
அது, 40 ஆண்டுகளைக் கடந்த பழமையான கட்டடம் என்பதால், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மழைநீர் கசிவு ஏற்பட்டது.
இதனால், ஆவணங்கள், மின் சாதனங்கள் மற்றும் கணினிகளை பாதுகாக்கும் வகையில், அருகில் உள்ள ஊராட்சி இ --- சேவை மையக் கட்டடத்தில், தற்போது தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
எனவே, பயன் பாடின்றி, பழுதடைந்துள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில், புதிய கட்டடம் அமைத்து தர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.