ADDED : ஜூலை 17, 2011 01:17 AM
திருப்பூர் : மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில், இலவச பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு முகாம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும், 'எவர் ஆன் ஸ்கில் டெவலப்மெண்ட்' நிறுவனம் சார்பில் இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச பயிற்சியாக, தையல் இயந்திரம் இயக்கும் பயிற்சி மற்றும் நுகர்வோர் சேவை உதவியாளர் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப் படுகிறது.
குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டதாரி கள் வரை பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கு பின் உரிய வேலை வாய்ப்பு பெற்று தரப்படும். இரண்டு நாட்கள் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமை, கலெக்டர் மதிவாணன் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து மாலை 6.00 மணி வரையில் நடந்த முகாமில், வேலை வாய்ப்பு பயிற்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். இரண்டாம் நாளாக இன்றும் முகாம் நடக்கிறது.