/உள்ளூர் செய்திகள்/கரூர்/வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்ததுவழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
ADDED : பிப் 10, 2024 10:19 AM
கரூர்: கரூரில், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட, இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த பால் பாண்டி, 30, வினோத் குமார், 32, ஆகியோர், கரூர் நகரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி, கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, எஸ்.பி., பிரபாகர், கலெக்டர் தங்க வேலுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் உத்தரவு படி, பால்பாண்டி, வினோத்குமார் ஆகிய இரண்டு பேரை, குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். அதற்கான நகல், திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவரிடம் வழங்கப்பட்டது.