/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'
சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'
சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'
சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'
ADDED : பிப் 10, 2024 07:38 AM
ஓசூர் : ஓசூரில், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாத கடைகள், பெட்ரோல் பங்க்கிற்கு அதிகாரிகள் நேற்று, 'சீல்' வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் ஆண்டுக்கு, 37 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலாக வேண்டும். ஆனால் ஆண்டுதோறும், 75 சதவீதம் வரைதான் சொத்து வரி வசூலாகி வருகிறது.
மீதமுள்ள, 25 சதவீதம் பல ஆண்டுகளாக வசூலாகாமல் உள்ளது. ஒவ்வொரு, 6 மாதத்திற்கு ஒருமுறை சொத்துவரி செலுத்த வேண்டும் என்ற நிலையில், ஓராண்டில் துவங்கி, 5 ஆண்டுக்கும் மேலாக, பலர் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். இதனால், மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 'ஜப்தி நோட்டீஸ்' வினியோகம் செய்த மாநகராட்சி நிர்வாகம், கடந்த டிச., முதல், 'சீல்' வைக்கும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சினேகா உத்தரவுபடி, உதவி கமிஷனர் டிட்டோ தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் அடங்கிய குழுவினர், நேற்று ஒரே நாளில் சொத்து வரி செலுத்தாத, 7க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு, 'சீல்' வைத்தனர். இதில், சில கடைகள் சொத்துவரியை செலுத்தியதால், 'சீல்' அகற்றப்பட்டது.