பெங்களூரு வடக்கு தொகுதி 'சீட்' பா.ஜ.,வில் சி.டி.ரவிக்கு எதிர்ப்பு
பெங்களூரு வடக்கு தொகுதி 'சீட்' பா.ஜ.,வில் சி.டி.ரவிக்கு எதிர்ப்பு
பெங்களூரு வடக்கு தொகுதி 'சீட்' பா.ஜ.,வில் சி.டி.ரவிக்கு எதிர்ப்பு
ADDED : பிப் 10, 2024 11:49 PM

பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜ., 'சீட்'டை முன்னாள் அமைச்சர் சி.டி.ரவிக்கு கொடுக்க, பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சிக்கமகளூரு தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சி.டி.ரவி. அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். கட்சியின் தேசிய பொதுச் செயலராகவும் பணியாற்றியவர்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும் கூட. கட்சியின் மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார்.
ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலில், பெங்களூரு வடக்கு தொகுதி 'சீட்' வழங்கும்படி, கட்சி மேலிடத்திடம் கேட்டுள்ளார்.
பெங்களூரு வடக்கு தொகுதி வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில், ஒக்கலிகர் சமூக ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரவியும் ஓக்கலிகர் என்பதால், பெங்களூரு வடக்கில் போட்டியிட்டால், எளிதில் வெற்றி பெறலாம் என்று நினைத்து உள்ளது.
தற்போது அந்த தொகுதி எம்.பி., ஆக, சதானந்த கவுடா இருக்கிறார். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக, முதலில் கூறினார்.
பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மேலிடம் அனுமதி அளித்தால் போட்டியிட தயார் என்று கூறினார். இந்த தொகுதியில் மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதாவை நிற்க வைக்கவும், பா.ஜ.,விடம் திட்டம் உள்ளது.
சதானந்த கவுடாவுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால், சுமலதா அல்லது ரவிக்கு 'சீட்' உறுதி என்று சொல்லப்படுகிறது.
ஆனால் ரவிக்கு 'சீட்' கொடுக்க, பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் சிக்கமகளூரை சேர்ந்தவர். அவருக்கும், பெங்களூருக்கும் என்ன சம்பந்தம் என்று, உள்ளூர் பா.ஜ., பிரமுகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
- நமது நிருபர் -