40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு முதல்வர் சித்தராமையா சவால்
40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு முதல்வர் சித்தராமையா சவால்
40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு முதல்வர் சித்தராமையா சவால்
ADDED : பிப் 10, 2024 01:36 AM
சித்ரதுர்கா :கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த பா.ஜ., ஆட்சியின் போது, அரசு திட்ட பணிகளை எடுத்து செய்யும் ஒப்பந்ததாரர்களிடம், 40 சதவீதம் கமிஷன் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2023 மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அரசு தோல்வியடைந்து, காங்., ஆட்சிக்கு வந்தது. ஆட்சி மாறிய நிலையிலும், 40 சதவீதம் கமிஷன் கலாசாரம் தொடர்வதாக, ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடியாக, சித்ரதுர்காவில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
முந்தைய பா.ஜ., அரசில் நடந்துள்ள 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்த, நீதிபதி நாகமோகன் தாஸ் கமிட்டி அமைத்துள்ளோம்.
காங்கிரஸ் அரசு மீதான, 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்கள் இருந்தால், விசாரணை கமிட்டியிடம் ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா தாக்கல் செய்யட்டும். அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் என்றால், அவர்கள் மீது புகார் அளிக்கட்டும். அதை விட்டு விட்டு வீணாக குற்றம்சாட்டக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.