/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தெற்காசிய போட்டிக்கு கோவை மாணவிகள் தேர்வுதெற்காசிய போட்டிக்கு கோவை மாணவிகள் தேர்வு
தெற்காசிய போட்டிக்கு கோவை மாணவிகள் தேர்வு
தெற்காசிய போட்டிக்கு கோவை மாணவிகள் தேர்வு
தெற்காசிய போட்டிக்கு கோவை மாணவிகள் தேர்வு
கோவை : 'கிரேயான்' சார்பில் தெற்கு ஆசியா நாடுகளின் பள்ளிகளுக்கிடையேயான 'ஹார்லிக்ஸ் விஸ்கிட்ஸ்' இறுதிப் போட்டியில் கோவை மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
தற்போது இந்தாண்டுகளுக்கான போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோவையில் எஸ்.என்.ஆர்., கல்லூரி கலையரங்கத்தில் இறுதிபோட்டிக்கான தேர்வு நடந்தது. பாட்டு, நடனம், இசை, பொதுஅறிவு, ஓவியம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. போட்டியில் 80 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன; 60 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை பதிவு செய்தனர். இதில் வித்யா நிக்கேதன் மெட்ரிக் பள்ளி மாணவி ஹெர்பதா மற்றும் ஸ்டேன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஹனப்பெல்லி எர்னத் என இரண்டு மாணவிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப்போட்டி பெங்களூரில் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. கோவை மாநகரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹெர்பதா மற்றும் ஹனப்பெல்லி எர்னத் என, இருமாணவிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்கின்றனர்.