/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/நெருப்பூர் முத்தத்திராயன் கோவிலில் சிறப்பு வழிபாடுநெருப்பூர் முத்தத்திராயன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நெருப்பூர் முத்தத்திராயன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நெருப்பூர் முத்தத்திராயன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நெருப்பூர் முத்தத்திராயன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : பிப் 10, 2024 07:56 AM
பென்னாகரம் : நெருப்பூர் அருகே உள்ள முத்தத்திராயன் சுவாமிக்கு, தை மாத அமாவாசையையொட்டி, நடந்த சிறப்பு வழிப்பாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நெருப்பூர் அருகே எழுந்தருளியுள்ள முத்தத்திராயன் கோவிலில், சந்தனமர வீரப்பன் வழிபட்டு வந்ததால், அக்கோவில் வீரப்பன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. தை மாத அமாவாசையான நேற்று நெருப்பூர், ஒட்டனுார், காட்டூர், நாகமரை, பன்னவாடியன்காடு, காமராஜ்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள், சுவாமி சிலையை எடுத்துக்கொண்டு கோவில் வலம் வந்தனர்.
அப்போது, சுவாமி சிலை தங்களை தாண்டி செல்லும்போது, தீய சக்திகள் தங்களை விட்டு விலகும் என்ற ஐதீகத்தின்படி பக்தர்கள் கிரிவலப்பாதையில் படுத்துக் கொண்டனர். மேலும், பொங்கல் வைத்தும், மொட்டையடித்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.