Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கொசு தொல்லை அதிகரிக்கும்; சாலையில் சாக்கடை ஓடும்: நேரு

கொசு தொல்லை அதிகரிக்கும்; சாலையில் சாக்கடை ஓடும்: நேரு

கொசு தொல்லை அதிகரிக்கும்; சாலையில் சாக்கடை ஓடும்: நேரு

கொசு தொல்லை அதிகரிக்கும்; சாலையில் சாக்கடை ஓடும்: நேரு

ADDED : மார் 27, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காவிட்டால், கொசு தொல்லை அதிகரிக்கும்; சாலையில் சாக்கடை ஓடும். எனவே, அறிவித்த திட்டத்தை கிடப்பில் போட முடியாது,'' என, அமைச்சர் நேரு கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம், வீரமாங்குடி ஊராட்சியில், கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, ம.ம.க., - எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது நடந்த விவாதம்:


ஜவாஹிருல்லாஹ்: அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, வீரமாங்குடி ஊராட்சியில், 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடம் பேரூராட்சியிடம் ஒப்படைக்கவில்லை. அங்கு அறிவியல் ரீதியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இடத்திற்கு அருகே கொள்ளிடம் கரை உள்ளது. கொள்ளிடத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், நீர் மாசுபடும். எனவே, தகுந்த இடம் கிடைக்கும் வரை, திட்டத்தை கிடப்பில் போட வேண்டும்.

அமைச்சர் நேரு: அய்யம்பேட்டை பேரூராட்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க போதுமான இடசவதி இல்லை. அருகில் உள்ள வீரமாங்குடி ஊராட்சியில், இரண்டு ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த நிலம், பேரூராட்சிக்கு ஒப்பபடைப்பு செய்யப்படவில்லை. நிலம் ஒப்படைப்பு செய்யும்பட்சத்தில் உரிய ஆய்வு மேற்கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று, விஞ்சான ரீதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படும்.

தமிழகம் முழுதும், 10 பேரூராட்சிகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 50 பேரூராட்சிகளில் பணிகள் நடந்து வருகின்றன. இது மட்டுமின்றி, 20 பேரூராட்சிகளில் பணிகள் துவங்கவுள்ளன.

சுத்திகரிப்பு நிலையம் தேவையில்லை என, கிடப்பில் போட்டு விட்டால், கொள்ளிடத்திற்குதான் கழிவுநீர் வந்து சேரும், கொசு தொல்லை அதிகரிக்கும்; சாலையில் சாக்கடை ஓடும். எனவே, அறிவித்த திட்டத்தை கிடப்பில் போட முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us