ஜல்லி, எம் - சாண்ட் விலை உயர்த்தினால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
ஜல்லி, எம் - சாண்ட் விலை உயர்த்தினால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
ஜல்லி, எம் - சாண்ட் விலை உயர்த்தினால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
ADDED : மார் 27, 2025 05:56 AM

சென்னை : ''கிரஷர் உரிமையாளர்கள் கூட்டணி அமைத்து, ஜல்லி, எம் - சாண்ட் விலையை உயர்த்தினால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்,'' என, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்தார்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
இந்திய கம்யூனிஸ்ட் - மாரிமுத்து: தஞ்சை, நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களுக்கு, அடிப்படை பணிகளுக்கு, ஜல்லி வர வேண்டும் என்று சொன்னாலும், எம் - சாண்ட் வர வேண்டும் என்று சொன்னாலும், புதுக்கோட்டை, கரூரில் இருந்து வர வேண்டும். இரு மாதங்களாக பணிகள் நின்று போயுள்ளன. ஜல்லி, எம் - சாண்ட் விலைகள், உடனுக்குடன் ஏற்றம் செய்யப்படுகின்றன.
அமைச்சர் வேலு: இந்த பிரச்னை, அனைத்து மாவட்டங்களிலும் இல்லை. குறிப்பிட்ட மாவட்டங்களில், கிரஷர் முதலாளிகள் கூட்டணி அமைத்து, விலையை உயர்த்துவது அரசுக்கு தெரியவந்தது. உடனே, முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
தன்னிச்சையாக உயர்த்த அனுமதி தரக் கூடாது என, கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூட்டணி அமைத்து விலையை ஏற்றினால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.