பூங்காவில் லில்லியம் மலர்கள் தயார்
பூங்காவில் லில்லியம் மலர்கள் தயார்
பூங்காவில் லில்லியம் மலர்கள் தயார்
ADDED : பிப் 10, 2024 01:07 AM
ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைப்பதற்காக, லில்லியம் மலர்கள் நர்சரியில் தயார் நிலையில் உள்ளன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசன் மற்றும் இரண்டாவது சீசன்களில் ஆயிரக்கணக்கான மலர்கள் தயார்படுத்தி, சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பது வழக்கமாக உள்ளது.
குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவினுள் அமைந்துள்ள இத்தாலியன் பூங்காவில் மலர்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக, தாவரவியல் பூங்கா நர்சரியில் நூற்றுக்கணக்கான லில்லியம் மலர்கள், ஆறு வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த மலர்கள், மிக விரைவில் கண்ணாடி மாளிகை மாடத்தில் வைத்து காட்சிப்படுத்தப்பட உள்ளன.
பூங்கா அதிகாரிகள் கூறுகையில், 'வரும் கோடை சீசனில், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, 250 ரகங்களில், பல லட்சம் மலர் நாற்றுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதில், கண்ணாடி மாளிகையில் வைப்பதற்காக, ஐந்து வண்ணங்களில், லில்லியம் மலர்கள், பூங்கா நர்சரியில் தயார் நிலையில் உள்ளன. இந்த மலர்கள் மிக விரைவில், கண்ணாடி மாளிகையில் வைத்து காட்சிப்படுத்தப்படும்,' என்றனர்.