/உள்ளூர் செய்திகள்/சேலம்/போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டுபோலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டு
போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டு
போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டு
போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டு
ADDED : பிப் 10, 2024 04:33 PM
சேலம் : சேலம் அருகே போலீஸ் ஏட்டு வீட்டில், பட்டப்பகலில் பூட்டை உடைத்து, 12 பவுன் நகை, மூன்று லட்சம் ரூபாய் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் அருகே அரியானுார், மதுரையான்காடு முதல் வீதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 45; மல்லுார் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு. இவரது மனைவி கங்காவதி, 36; தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஜெய்சங்கர் வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த கங்காவதி, தனது தாயுடன் ஆட்டையாம்பட்டியில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்று விட்டார்.
மாலையில் திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தார். பீரோ லாக்கரில் வைத்திருந்த, 12 பவுன் நகை, மூன்று லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. ஆள் இல்லாததை நோட்டமிட்டு, பட்டப்பகலில் களவாணிகள் கைவரிசை காட்டியுள்ளனர். தடவியல் நிபுணர்கள் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி, திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.