முதல் முறையாக வீடு வாங்கினால் ரூ.1 லட்சம் சலுகை தரும் 'நவீன்ஸ்'
முதல் முறையாக வீடு வாங்கினால் ரூ.1 லட்சம் சலுகை தரும் 'நவீன்ஸ்'
முதல் முறையாக வீடு வாங்கினால் ரூ.1 லட்சம் சலுகை தரும் 'நவீன்ஸ்'
ADDED : பிப் 10, 2024 12:03 AM
சென்னை:தமிழகத்தின் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமான நவீன்ஸ், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் சலுகையை அறிவித்துள்ளது.
சென்னை மேடவாக்கத்தில், நவீன்ஸ் உருவாக்கியுள்ள, நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ்; திருமுடிவாக்கத்தில் உள்ள ஹில்வியூ அவென்யூ ஆகிய இடங்களில், இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக நவீன்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.குமார் கூறுகையில், ''கடந்த 10 ஆண்டுகளில், ரியல் எஸ்டேட் வணிகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டுள்ளோம்.
''வீடு வாங்கத் தயாராக உள்ளவர்களில், 65 சதவீதம் பேருக்கு விலை உயர்வு பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், சொந்த வீடு என்பது கனவாகவே உள்ளது. எனவே தான், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் சலுகையை அறிவித்துள்ளோம்,'' என்றார்.
மேடவாக்கம், திருமுடிவாக்கத்தில், நவீன்ஸ் நிறுவனத்தின் புதிய குடியிருப்பு வளாகங்களில், 40,000 ரூபாய் மாத தவணையில் வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
சிறு திரையரங்கம், உடற்பயிற்சிக் கூடம், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கம், பூங்கா, சிறுவர் விளையாட்டுத் திடல் என பல்வேறு வசதிகள் உள்ளன.
பதிவு கட்டணங்கள், ஜி.எஸ்.டி., வரி, சேவை இணைப்பு, உள் கட்டமைப்பு, கார் பார்க்கிங் கட்டணங்கள், கிளப்ஹவுஸ் உறுப்பினர், இரண்டு ஆண்டுகளுக்கான பராமரிப்பு ஆகிய சலுகைகளும் வழங்கப்படும் என, நவீன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.